இரத்தமானது பூசப்பட்டபின் அந்த அடையாளத்தை இடு (Let The Blood Be Applied And Then Apply The Token) யாத்திராகமம் 12:13, .... "அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்து போவேன்...' இதைக் குறித்து தேவனுடைய தீர்க்கதரிசி பிரன்ஹாம் கூறியுள்ளதை கவனியுங்கள்: இன்று காலை நான் அளித்த செய்தியானது (அடையாளம் - செய்தி ) என்னுடைய முழு ஊழியத்திலும் அளிக்கப்பட்ட செய்திகளிலே மிகப்பிரதானமான ஒரு செய்தியாகும். அது எப்படி எனக்குக் கிடைத்தது என்று ஒரு நாள் நான் உங்களுக்கு கூறுவேன். அநேக, அநேக, அநேக மாதங்களாக எல்லாமே செயல் புரிந்து அந்த செய்தியிலே முடிவுற்றது. அது தான் அதனுடைய , எல்லவற்றையும் முடிவுறச் செய்யும் தருணமாகும். உங்களுக்கு புரிகின்றதா? இப்பொழுது அந்த அடையாளம் என்னவென்பதின் அர்த்தத்தை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்று நான் நம்புகிறேன், நிச்சயமாக நம்புகிறேன். பாருங்கள்? இரத்தம் பூசப்பட்டது என்றும், தேவனுக்கு அவசியமாக தேவைப்பட்ட கிரயத்தை இயேசு தம்முடைய சொந்த இரத்தத்தை செலுத்தியதின் மூலம் அந்த கிரயத்தை செலுத்தி விட்டார் என்பதன் அறிகுறியாகத்தான் அந்த அடையாளம் விளங்குகிறது. (வெளி. 1 - 5). அவர் அதைச் செய்தார். அப்பொழுது, அவருடைய ஜீவனிலிருந்து பரிசுத்த ஆவி வந்தது. ஆகவே இந்த இரத்தமானது உங்கள் மீது பூசப்படும் போது, உங்களுடைய கிரயம் செலுத்தப்பட்டது என்பதற்கு அடையாளமாக பரிசுத்த ஆவி அமைந்துள்ளது. தேவன் உங்களை ஏற்றுக்கொண்டார். ஆகவே அது தான் அந்த அடையாளமாகும். நினைவில் கொள்ளுங்கள், அது தான் அந்த அடையாளமாகும். இப்பொழுது, அடையாளம் என்பது என்னவென்று தெரியாத அநேக மக்கள் இருக்கின்றனர். ஆகவே எவருமே அறிந்துகொள்ளாத விதத்தில் நீங்கள் அதைச் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். ஏனென்றால் அதினாலே எல்லாரும் அதைப் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக அது அமைந்திருக்கும். இரட்சிப்பைப் பிரசங்கிப்பது போலாகும், இரட்சிப்பு எல்லாருக்கும் உரியது என்கின்ற விதத்தில் நாம் பிரசங்கிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். ஆனால் அது அவ்விதமில்லை என்பதை நாம் அறிவோம். அவ்வாறே, தெய்வீக சுகமளித்தலும் எல்லோருக்கும் உரியது என்று நாம் பிரசங்கிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம், ஆலுைம் அது அவ்விதமல்ல என்று நாமறிவோம். பாருங்கள்? உலகத் தோற்றத்துக்கு முன்னால் மீட்பின் புத்தகத்தில் பெயரெழுதப்பட்டவர்களை இரட்சிக்கவே இயேசு வந்தார். (வெளி 13.8). அவர்களை மாத்திரமே இரட்சிக்க அவர் வந்தார். (யோவான் 17.9-10). அவர்கள் யார், எனக்கு அது தெரியாது. பாருங்கள்? அது எவருக்காகிலும் என்று சொல்லாவிட்டால் யாருமே விசுவாசம் கொள்ள முடியாது, ஆனாலும் அது அவ்வாறுதான், தேவன் அழைத்திராவிட்டால் ஒருவராலும் வரமுடியாது (யோவான் 6:44, அப்போஸ்தலர் 2:39). அது உண்மை . ஆகவே அநேகர் இரட்சிக்கப்படமாட்டார்கள். அதை நாம் அறிவோம். அவர்கள் இரட்சிக்கப்பட மாட்டார்கள் என்று உலகம் உண்டாவதற்கு முன்னமே தேவன் அறிந்திருந்தார். சுகமளிக்கப்படாதிருக்கப் போகின்ற அநேகர் உள்ளனர், அநேகர் சுகமாக்கப்படமாட்டர்கள். அவர்களால் அதை கிரகித்துக்கொள்ள முடியாது. அது என்னவென்பது அவர்களுக்குத் தெரியாது. அநேகர் அவ்விதம் இருப்பர். ஆனாலும் அது எல்லோருக்கும் உரியது என்று நாம் பிரசங்கிக்கிறோம். ஏனெனில் யார் சுகத்தைப் பெற்றுக்கொள்ளப் போகின்ற நபர் என்பது நமக்குத் தெரியாது: அது நமக்குத் தெரியாது. ஆனாலும் யாராயினும் ஒருவராக அது இருக்கிறது. ஆனால் அந்த விசுவாசத்தை சில மக்களால் கிரகித்துக் கொள்ளவே முடியாது. (11 தெசலோனிக்கேயர் 3:2). ஆகவே இந்த அடையாளத்தைக் குறித்தும் அதேவிதமே, அந்த இவ்வளவு காலமாக நாம் அந்த அடையாளத்தினிடம் பேசி வந்துள்ளோம், ஆனால் இப்பொழுது அந்த அடையாளத்தின் வெளிப்படுத்தலாக இருக்கின்றது. பாருங்கள்? லூத்தரன்கள் அது வார்த்தையை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக அனுமதித்தனர், கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்தல்.மெதொடிஸ்டுகளும், நீங்கள் கூச்சலிடும் அளவிற்கு மகிழ்ச்சியுற்றால் அது தான் அது என்று கூறினர். பெந்தெகொஸ்தெயினர், "நீங்கள் அந்நிய பாஷையில் பேசினால் அதை நீங்கள் பெற்றுக்கொண்டீர்கள் என்பதாகும் என்று கூறுகின்றனர். இக்கருத்துக்கள் எல்லாம் தவறாயிருக்கின்றது என்பதை நாம் கண்டறிந்தோம். பாருங்கள்? அடையாளம் என்பது அடையாளமே. அது நீயும் கிறிஸ்துவும் சேர்ந்து ஒன்றாய் இருத்தல் என்பதாகும். (யோவான் 14:18-20). பாருங்கள்? அது பரிசுத்த ஆவியானவர் தம்முடைய ஜீவனை உனக்குள் வைத்து தம்முடைய சொந்த ஜீவனை உன் மூலமாக நடப்பித்தலாகும். அது ஐசுவரியவான்களுக்கும், ஏழைகள் மற்றும், அதைப் பெற்றுக் கொள்ளும் யாவருக்கும் உரியது. இப்பொழுது, இந்த விஷயத்தில் இரத்தம் தான் அடையாளமாயுள்ளது. இருக்கின்றவாறே அது எடுத்துப் பூசப்படவேண்டும், ஏனெனில் அது ஒரு மூலகூறுகள் உள்ளடக்கிய ஒரு இரசாயனம் மாத்திரமே, அது ஒரு ஆட்டுக்குட்டியின் இரத்தமாக இருந்தது, ஒரு மிருகத்தின், ஒரு ஆட்டுக்குட்டியின் இரத்தம் மாத்திரமே (யாத். 12:13). ஆகவே அந்த இரத்தத்தில் இருந்த அந்த ஜீவன், அந்த ஜீவன் வெளியே சென்று விட்டது... ஆகவே அந்த இரத்தம் சிந்தப்பட்டது. பாருங்கள்? ஜீவன் வெளியே சென்று விட்டது, எனவே அது விசுவாசியின் மீது மறுபடியுமாக வர முடியாது, ஏனெனில் அங்கு செத்தது ஒரு மிருகமே. ஆகவே ஒரு பரிபூரண பலியானது ஒன்று வரப்போகிறதென்று ஒரு நல் நிச்சயத்துடனே அது தெரியப்படுத்தினது. அதை பரிபூரணமான ஒன்றாக ஆக்குவதற்காக, எல்லாவற்றிற்கும் நியாயாதிபதியான, பரலோகத்தின் தேவனே அந்த பலியாகவும், நியாயாதிபதியாகவும், பாரபட்சமற்ற தீர்ப்பை வழங்க அமைக்கப்பட்டிருக்கும் நீதிக்குழுவாகவும், வழக்கறிஞ்ஞருமாகவும் அவர் ஆனார். பாருங்கள்? அவர் அந்த பலியாக ஆனார். (பிலி. 2:5-11), அப்பொழுது அவருடைய ஜீவன் வெளியே சென்றது, அது தேவனுடைய ஜீவனாகும்... அந்த வார்த்தை இதிலிருந்து தான் வருகின்றது, "நான் அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்" (யோவான் 5:24). கிரேக்க மொழியில் அந்த வார்த்தை "20e. சோ" என்பதாகும், கிரேக்க மொழியில் "சோ Z-0-C என்றால் தேவனுடைய சொந்த ஜீவன்'' என்பதாகும். "நான் அவர்களுக்கு (சோ', zoe) என் சொந்த ஜீவனைக் கொடுகிறேன் கிறிஸ்துவும் தேவனும் ஒருவரே. ஆகவே கிறிஸ்துவுக்குள் இருக்கும் ஜீவனே பரிசுத்த ஆவியாகும், பரிசுத்த ஆவி மூன்றாவது நபரல்ல, உன்னுடைய ஜீவனும், கிரயமும் செலுத்தப்பட்டாயிற்று என்பதற்கான அடையாளமாக அந்த அதே நபர் தான் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் உன் மீது வருகின்றார். நீ ஏற்றுக்கொள்ளப்பட்டாய். அந்த டோக்கன் (அடையாளம் உனக்கு வரவில்லையென்றால், நெடுஞ்சாலைகளில் பிரயாணிக்க நீ அனுமதிக்கப்படமாட்டாய். அந்த அடையாளத்தை நீ காண்பிக்கும் வரை பிரயாணிக்க உனக்கு அனுமதி கிடையாது, அந்த அடையாளம் தான் கட்டணத்தை நீ செலுத்திவிட்டாய் என்பதற்கான அத்தாட்சியாகும். இரத்தமானது சிந்தப்பட்ட தென்றும், உனக்கு இடப்பட்டுள்ள தென்றும், கிரயமானது இடப்பட்டாயிற்றென்றும், இரத்தமான உனக்கு இடப்பட்டு நீ அந்த அடையாளத்தைப் பெற்றுள்ளாய் என்றும் நீ ஏற்றுக்கொள்ளப்பட்டாய் என்றும் அது காண்பிக்கின்றது. இப்பொழுது கவனியுங்கள், இப்பொழுது, இப்பொழுது, ஒரு குறிப்பிட்ட அத்தாட்சி அதற்கு கிடையாது. பாருங்கள்? அப்படியானால் சகோதரன் பிரன்ஹாமே, அதை நான் எப்படி அறிந்து கொள்ளலாம்? என்று நீங்கள் கேட்கலாம். கவனியுங்கள். நீங்கள் முன்பு என்னவாயிருந்தீர்கள்? இப்பொழுது என்னவாயிருக்கிறீர்கள்? அப்படித் தான் நீங்கள் அதை அறிந்து கொள்ளமுடியும். பாருங்கள்? இந்த அடையாளம் பூசப்படுவதற்கு முன்னர் நீங்கள் என்னவாயிருந்தீர்கள்? இந்த அடையாளம் பூசப்பட்ட பிறகு நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள்? உங்கள் விருப்பங்கள் முன்பு என்னவாயிருந்தன? இப்பொழுது என்னவாயிருக்கின்றன? அடையாளம் பூசப்பட்டதா அல்லது இல்லையா என்று அதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அந்த மற்றைய காரியங்களெல்லாம் அந்த அடையாளத்தோடு தானாகவே இசைந்து செல்கின்றது. பாருங்கள்? அதைக் குறித்துப் பேசி, "அன்னிய பாஷையில் பேசுவது அதைப் பெற்றதன் அத்தாட்சியாகும் என்று கூறலாம். இப்பொழுது, நான் ஒரு ஜதை காலணியை வாங்குகிறேன் என்று வைத்துக்கொள்வோம். அந்தக் காலணியின் நாக்கு (tonguc) (காலணியின் நுழை வாயிலுக்கு மேல் பொருத்தப் பட்டுள்ள மிருதுவான தோல் - தமிழாக்கியோன்) காலணியல்ல. அது காலணியுடன் சேர்ந்து வருகின்றது. பாதங்கள், அது காலணியுடன் சேர்ந்து வருகின்றது. பாருங்கள்? அதே விதமாகத்தான் அடையாளமும் கூட. அந்த அடையாளம் கிறிஸ்துவே ஆகும். அன்னிய பாஷை பேசுதல், பிசாசுகளைத் துரத்துதல், அந்த விதமான காரியங்களைச் செய்தல், பிரசங்கம் செய்தல், மற்றும் அதைப் போன்ற காரியங்கள் இருந்தாலும் அது இருக்கின்றது என்பதன் அத்தாட்சி மட்டுமே. அது உண்மையே, ஆனால் அது அதுவல்ல. பாருங்கள்? அவை பரிசுத்த ஆவியின் வரமாகும். அன்னிய பாஷையில் பேசுவது பரிசுத்த ஆவியின் வரமாகும், அது பரிசுத்த ஆவிதான் என்பது அல்ல, பரிசுத்த ஆவியின் ஒரு வரமாகும். (1 கொரி. 12:10). இந்த வரங்களில் எந்த ஒன்றையாகிலும் பிசாசினால் பாவனை செய்து காட்ட முடியும். ஆனால் அவனால் பரிசுத்த ஆவியாக இருக்கவே முடியாது. பாருங்கள்? இந்த வரங்களை அவனால் போலியாக பாவனை செய்து காட்ட முடியும், ஆனால் பரிசுத்த ஆவியாக அவனால் இருக்க முடியாது. இரத்தம் பூசப்பட்டுள்ளது என்பதற்கு அடையாளமாக பரிசுத்த ஆவி உள்ளது, ஏனெனில் அது மீட்பின் புத்தகத்திலிருந்து இரத்தத்தை பின் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றது. அதை உங்களால் புரிந்து கொள்ள முடிகின்றதா? அவர் வந்ததற்கான நோக்கம் அதுவேயாகும். ஒவ்வொரு காலத்திலும் அதைத் தான் அவர் பின் தொடர்ந்துக் கொண்டே வந்தார். அது வெளிக் கொணரப் பட்டதா என்று பார்க்கத்தக்கதாக அவர் அதைத் தொடர்ந்துக் கொண்டே வந்தார். நம்மையல்லாமல் அவர்கள் பூரணராக முடியாது (எபி. 11:39-40) அக்கினியால் எரிக்கப்படுதற்கு முன்னர் அவர் சோதோமுக்கு முன்பாக செய்தது போல் இப்பொழுதும் பரிசுத்த ஆவியின் முழுமை சபையைச் சந்தித்து மானிட மாம்சத்தில் தேவன் வெளிப்படுமாறுச் செய்கின்றது. சோதோமில் நிகழ்ந்தது இதற்கு முன்னடையாளமாயுள்ளது. அப்பொழுது அவர் ஆபிரகாமுக்குத் தோன்றினார். (ஆதி 19:19). சபையின் காலங்களினூடே அவர் புரியாத எல்லா காரியங்களையும் இக்காலத்தில் அவர் செய்து கொண்டிருக்கின்றார். வார்த்தைக்கு மறுபடியுமாகத் திரும்புதல், ஏனென்றால் செய்திகள், இந்த செய்திகள், இந்த செய்திகள் முழு வார்த்தையுடனும் சேர்ந்து முடிவடைய வேண்டியவைகளாக இருக்கின்றன. ஆகவே இந்தக் கடைசி நாட்களில் ஏழு முத்திரைகள் திறக்கப்பட்டிருப்பதால், அது விடப்பட்டிருந்த பிரிந்து போன ஒவ்வொன்றையும் எடுத்து, மணவாட்டியின் மகத்தான பெரிய சரீரத்துக்குள்ளாக அந்த முழு காரியத்தையும் உள்ளடக்க வேண்டும். முற்காலத்திலே அப்போது ஜீவித்த அவர்கள், இக்கடைசி நாட்களுக்கான இந்த மணவாட்டி குழு, இந்த சபை பரிபூரணமாக்கப்படும் வரைக்கும் அந்நாட்களுக் குரியவர்கள் பரிபூரணமடை வதில்லை அவர்களும் உள்ளே கொண்டு வரப்பட்டு எல்லோரும் ஒன்றாக எடுத்துக் கொள்ளப்படுவார்கள் (எபி 11:39-40) இயேசு கிறிஸ்து - பரிசுத்த ஆவியாகிய அந்த அடையாளம் இப்பொழுது நம்மிடையே இருக்கின்றது. நாம் அதை பயபக்தியுடன் பேண வேண்டும். நாம் நம்மைப் போதிய அளவிற்குத் தாழ்த்திக் கொள்ள முடியாது. உங்களுடைய காலணிகளை கழற்றுதல் அல்லது உங்கள் முழங்காலில் நிற்றல் போன்றவை காரியத்தை வெளியே எடுத்துப் போடாது, அது திருப்தியளிக்காது; அது நமக்குப் போதுமானதாகவும் இருக்காது, ஆனால் தேவையானது என்னவெனில் ஆவியின் கனிகளை வெளிக் கொண்டுவரும் ஒரு ஜீவியம் மாத்திரமே. (எபே. 5:8-9) ஆவியின் கனிகள் யாவை? பாருங்கள்? அன்பு சந்தோஷம், சமாதானம்... (கலா. 5:22-23) நீங்கள் யாராயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. உடன்படிக்கை இல்லாமலிருந்தால் அந்த கோபாக்கினை உங்கள் மேல் தங்கும் (எபி. 8:10-13) அது சரியே. அது உங்களைப் பிடிக்கும். ஆம், உங்கள் பாவங்கள் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும். பாவம் என்றால் என்ன? அவிசுவாசம் (யோ. 16:8-9) நீங்கள் செய்தியை அவிசுவாசித்தீர்கள். நீங்கள் வார்த்தையை அவிசுவாசித்தீர்கள். அடையாளத்தின் சாட்சியானது நம் மத்தியில் தம்மைத் தாமே அடையாளப்படுத்திக் காண்பிக்கையில் அதையும் நீங்கள் அவிசுவாசித்தீர்கள். நீங்கள் அதை அவிசுவாசிக்க வில்லையா? எவ்வளவு தான் நீங்கள் அதை அவிசுவாசித்தாலும் சரி, அது பூசப்பட, நம் மீது வைத்துக் கொள்ளப்படத்தான் வேண்டும். நீங்கள், "நான் நம்புகிறேன்; நான் நம்புகிறேன். அது சத்தியமென்று நான் விசுவாசிக்கிறேன். அது சத்தியமென்று ஏற்றுக் கொள்கிறேன்'' என்றும் கூறலாம். அவையெல்லாம் நல்லது தான், ஆயினும் அந்த அடையாளம் நம் மீது பூசப்பட வேண்டும். அங்கே ஒரு யூதன், அந்த ஆட்டுக் குட்டி இரத்தம் சிந்தி மரித்துக் கொண்டிருக்கும் போது அதன் இரத்தத்தைக் கலக்கிக் கொண்டே "இது தான் யேகோவா என்று கூறிக் கொண்டிருந்தால் எப்படியிருக்கும். அங்கே நின்று கொண்டிருந்த ஆசாரியனும், "ஆம் ஐயா, அது உண்மை என்று நான் நம்புகிறேன்'' என்று கூறிக்கொண்டிருக்கிறான். ஆனால் அவனுடைய சொந்த வீட்டின் மேல் அந்த இரத்தமானது பூசப்படவில்லை. வாசலின் மேல் இரத்தத்தைப் பூசுகின்ற அத்தீவிர பக்தி வைராக்கியம் கொண்ட அந்த குழுவுடன் தன்னை அவன் ஒன்று படுத்திக் கொள்ள விரும்பவில்லை (இல்லை, ஐயா). அவன் அவர்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை; அவன் எவ்வளவு பெரிய ஆசாரியனாக இருந்தாலும் சரி, எவ்வளவு தான் அவன் வார்த்தையை அறிந்திருந்தாலும் சரி, அவன் எவ்வளவு நல்லவனாக வளர்க்கப் பட்டிருந்தாலும் சரி, அவன் எவ்வளவு நல்ல கிரியைகளைச் செய்திருந்தாலும் சரி, எவ்வளவுதான் அவன் ஏழைகளுக்கு தர்மம் செய்திருந்தாலும் சரி, எவ்வளவு தான் அவன் பலி செலுத்தியிருந்தாலும் சரி அதனால் ஒரு உபயோகமுமில்லை ... (யாத் 12:1-28) அந்த அடையாளம் (அதைக் குறித்துதான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன் பரலோக அன்பு , Agapo-love) அது என் மீது பூசப்படா விட்டால் நான் ஒன்றுமில்லை. பாருங்கள்? (I கொரி. 13:1-8) நீங்கள் ஒருக்கால் பிசாசுகளைத் துரத்தியிருக்கலாம்; உங்கள் விசுவாசமுள்ள ஜெபத்தால் வியாதியஸ்தரைச் சுகமாக்கியிருக்கலாம். இந்த எல்லா காரியங்களையும் நீங்கள் செய்திருக்கலாம். அதைக் குறித்து எனக்கு கவலையேயில்லை. அந்த அடையாளம் அங்கில்லையெனில் நீங்கள் தேவ கோபாக்கினைக்கு ஆளாவீர்கள் (ரோமர் 5:9). நீங்கள் ஒரு விசுவாசியாக இருக்கலாம். நீங்கள் பிரசங்க பீடத்தில் நின்று சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கலாம். "அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன் அல்லவா? உமது நாமத்தினாலே பிரசங்கம் செய்தேன் அல்லவா. உமது நாமத்தினாலே பிசாசுகளைக் கூட நான் துரத்தினேன் அல்லவா?" அதற்கு இயேசு "நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக் காரரே என்னை விட்டு அகன்று போங்கள்'' என்று கூறினார் (மத்தேயு 7:21-23) ஆனால் அந்த அடையாளத்தை நான் கண்டு உங்களைக் கடந்து போவேன்.' அதுவே இந்த மணி நேரத்தின் தேவனுடைய தேவையாயுள்ளது. சாயங்கால மணி நேரத்தின் செய்தி எதற்கென்றால் அந்த அடையாளத்தை பூசுவது, வைப்பதற்காகத்தான். எதிப்திலிருந்து வெளி வந்த இஸ்ரவேலர் இன்றிருக்கின்ற இந்த அடையாளத்திற்கு முன்னடையாளமாகத் திகழ்கின்றனர். எகிப்து ஸ்தாபன சபைக்கும் இஸ்ரவேலர் மணவாட்டிக்கும் பிரதிநிதித்துவமாக இருக்கின்றனர். இஸ்ரவேலர் எகிப்தை விட்டு வெளி வந்தனர். அதே போன்று மணவாட்டியும் சபையிலிருந்து வெளியே வந்தனர். பாருங்கள்? அவர்கள் வெளியே வரும்படியாக அவர்கள் முன்பு உள்ளே இருக்கத்தக்கதாக ஒன்று இருந்தாக வேண்டும், அதிலிருந்து அவர்கள் வெளியே வந்தாக வேண்டும். ஆகவே அது ஒரு நிழலாக... ஆகவே சபை எகிப்தில், உலகத்தில், பாவத்தில் இருந்து கொண்டு உங்கள் அடையாளத்தைக் குறித்து சிறிதளவு கூட கவலை கொள்வது கிடையாது. அவர்கள் அதை விசுவாசிப்பது கூட இல்லை. ஆனால் இஸ்ரவேலரோ அதை நேசித்தனர், ஏனென்றால் அது அவர்களுக்கு இரட்சிப்பாக இருந்தது. ஓ, அது நம்மை சந்தோஷம் அடையச் செய்ய வேண்டும், அது நம்முடைய இருதயங்களை... ஓ சபையே, அதைப் பூசிக்கொள்! அதைத் தவற விடாதே! அப்படிச் செய்வாயல்லவா? சூரியன் மறையும் முன்பே அதைச் செய். இரவும் பகலும் அயராமல் பாடு பட்டு அதைப் பெற்றுக் கொள்ளுமட்டும் ஓயாதே. அலட்சியமாக இருந்திட வேண்டாம் பிள்ளைகளே. நீ அடையாளத்தை கொண்டிருக்கத் தான் வேண்டும்! அது இல்லையெனில் ஒரு பிரயோஜனமும் கிடையாது. நீங்கள், "நான் விசுவாசிக்கிறேன், ஆம், நான்... ஆம், நான் செய்தியை விசுவாசிக்கிறேன் என்று கூறலாம். அவை எல்லாம் சரிதான். ஆனால்... அது நல்லது தான். ஆனால் நீங்கள் அடையாளத்தைப் பெற்றிருக்கத் தான் வேண்டும். பிரன்ஹாம் கூடாரமே, இதை கேட்கின்றீர்களா? அந்த அடையாளத்தை எல்லோரும் காணும்படிக்கு செய்யத்தான் வேண்டும். அந்த அடையாளம் இல்லாமல் நீ கொண்டிருக்கின்ற எல்லா விசுவாசமும் வீண். பாருங்கள்? நீ சன்மார்க்க வாழ்க்கை நடத்தலாம்; வார்த்தை என்ன கூறுகிறதோ அதற்கு நீ செவிசாய்க்கலாம்; நீ சபைக்குச் செல்லலாம்; நீ சரியான விதத்தில் வாழ முற்படலாம்; அது அருமையானது தான், ஆனால் அது மாத்திரம் போதாது. "அந்த இரத்தத்தை நான் கண்டு, அது தான் அடையாள மாகும், இன்றுள்ள இந்த அடையாளம்...”. இரத்தமாகிய அடையாளத்துக்கு புறம்பே இருந்த அனைவரும், ஒவ்வொருவரும் அழிந்து போயினர். ஆகவே பரிசுத்த ஆவியாகிய அடையாளத்திற்கு புறம்பே இருக்கின்ற ஒவ்வொருவரும் அழிந்து போவார்கள். எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரி, எவ்வளவு அங்கத்தினர்களைக்கொண்டிருந்தாலும் சரி. அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. நோவாவின் நாட்களில் அவர்களைப் போல அநேகர் இருந்தனர்; மோசேயின் நாட்களில் அவர்களைப் போல அநேகர் இருந்தனர், ஆனால் இரத்தத்தை அடையாளமாக பூசத் தவறின ஒவ்வொரு மனிதனும் மாண்டுபோனான். பேழைக்குள் பிரவேசிக்கத் தவறினவர்கள் மாண்டு போயினர். அவ்விதமே கிறிஸ்துவுக்குள்ளாக வரத் தவறுகின்றவர்களுக்கும். ஏனெனில் அவர் தான் அந்த பேழை... "ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு' என்று / கொரிந்தியர் 12:13 கூறுகின்றது. காணக் கூடாத..... சபையல்ல, காணக்கூடாதது.... ஸ்தாபனங்களல்ல, காணக்கூடாத இயேசு கிறஸ்துவின் சரீரம்; ஒரே ஆவியானாலே (S-P-I-R-I-T) அந்த ஒரே சரீரத்துக்குள்ளாக நாம் எல்லாரும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம். அப்பொழுது அந்த அடையாளம் வாசலின் மீது இருக்கின்றது, ஏனென்றால் நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கிறீர்கள், அவர் தான் அந்த பலியாக, உங்கள் பலியாக செலுத்தப்பட்டார், அவர் நியாயத்தீர்ப்படைந்தார்; தேவன் அதைக் காணும் போது அவரால் வேறொன்றும் செய்ய முடியாது. இருப்பதிலேயே மிகவும் பாதுகாப்பான நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள், ஏனெனில் தேவனும் கிறிஸ்துவும் தாமே ஒரே நபர். பரிசுத்த ஆவியானவர் மாம்சமாகி நமது மத்தியில் வாசம் செய்தார் (யோவான் 1:1-3, 14-18). ஆகவே தேவன் தாமேயும் தமது சொந்த பிள்ளைகளாகிய உங்களையும் அந்த சரீரத்தில் கொண்டிருக்கின்றார். உங்களுக்குப் புரிகின்றதா. ஒரு இரசாயனம் அல்ல, ஆனால் பரிசுத்த ஆவியானவர். அதை நான் கண்டு உங்களைக் கடந்து போவேன் (யாத். 12:13) கவனியுங்கள், அவர்கள் செய்தியைக் குறித்து மாத்திரம் பேச அவர்கள் ஒன்று கூடவில்லை. அவர்கள் இரத்தத்தைப் பூசுவதற்காக, அடையாளத்தைப் பூசிக்கொள்வதற்காக அவர்கள் ஒன்று கூடினர். அதைத் தான் நீங்களும் செய்ய வேண்டும். சகோதரர்களே நாம் உலகத்தின் எல்லாவிதமான மடத்தனமான நடக்கைகளை புறம்பே தள்ளிவிட வேண்டிய நேரம் இதுவாகும், எல்லா காரியங்களையும் புறம்பே தள்ள வேண்டிய நேரம் இதுவாகும். நாம் அதை போதிய அளவில் கண்டிருக்கின்றோம் என்பது உறுதி, நிச்சயமாக, அடையாளம் பெற்றுக்கொள்ளப் படத்தான் வேண்டும். அடையாளம் இல்லாவிடில் நீங்கள் அழிந்து போய்விடுவீர்கள்; இல்லையெனில் அழிந்து போகத்தான் வேண்டும். அது ஒன்று மாத்திரமே நடக்கும். நீங்கள் ஒன்று கூடி "அதை நான் விசுவாசிக்கிறேன்" என்று கூறினால் மாத்திரம் போதாது. அடையாளத்தின் கீழ் வாருங்கள் ! அதற்குள்ளாக சென்று விடுங்கள்! அதை எப்படி செய்வது? ஒரே ஆவியினாலே இயேசு கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறீர்கள். (எபே 4:5-6) நீங்கள் ஒவ்வொருவரும் அதை முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். பாருங்கள்? அந்த அடையாளத்தின் கீழிராமல் புறம்பேயுள்ளவர்களுக்கு அவர் பொறுப்பல்ல. நீங்கள் எவ்வளவு தான் பாவத்திற்குள்ளாக இருந்தாலும் பரவாயில்லை, என்ன காரியங்களை நீங்கள் செய்திருந்தாலும் பரவாயில்லை, அதற்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. நீ அந்த அடையாளத்தை உன் மீது போட்டுக் கொள். அது உனக்காகவே உள்ளது. உங்கள் இருதயத்தில் ஏதோ ஒன்று உங்களை இழுப்பதாக நீங்கள் உணர்ந்தால், அது உங்களுக்காகத் தான்; அந்த அடையாளத்தை உங்கள் மீது போட்டுக் கொள்ளுங்கள். இப்பொழுது உன்னிப்பாத கவனியுங்கள். முழு தேவனுடைய வார்த்தைக்கு முற்றிலுமாக கீழ்ப்படிதல் நம்மை அந்த அடையாளத்திற்கு உரிமையாளர்களாக்குகின்றது. பிறகு நாம் ஜெபிக்கையில் அந்த அடையாளத்தை நமது ஜெபத்தோடு கூட சமர்ப்பிக்கத்தக்கதாக நாம் அதைப் பெற்றிருத்தல் அவசியம். நீங்கள், "நான் ஜெபிக்கிறேன் ஆண்டவரே, ஆனால் என்னிடமாக அந்த அடையாளம் இல்லை...' என்று கூறுவீர்களானால், ஆம், இதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும். நீங்கள் ஜெபத்தை நிறுத்திவிடுவது நல்லது. பாருங்கள்? முதலில் சென்று அடையாளத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் அந்த அடையாளத்தை மாத்திரமே அவர் அடையாளங்கண்டு கொள்கின்றார். பாருங்கள்? ஆம் ஐயா, நாம் ஜெபம் செய்யும் போது நாம் அந்த அடையாளத்தை சமர்ப்பிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். "கர்த்தாவே, நான் உமக்கு முற்றிலுமாக கீழ்ப்படிந்திருக்கிறேன். என் பாவங்களுக்காக நான் மனஸ்தாபப் பட்டு விட்டேன். என்னை நீர் மன்னித்து விட்டீர் என்று நான் உணருகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறேன். பரிசுத்த ஆவி என் மேல் தங்கியிருக்கின்றது இப்பொழுது உம்முடைய மகிமைக்காக இன்னின்ன காரியம் எனக்குத் தேவைப்படுகின்றது, காத்தாவே, அதற்காக நான் உம்மிடம் விண்ணப்பிக்கின்றேன். அது இப்பொழுது என்னுடையதாகும்" என்று ஜெபம் செய்யுங்கள். அப்பொழுது ஏதோ ஒன்று அங்கு நங்கூரமிடப்படுகின்றது. அப்பொழுது அது உங்களுடையதாகி விடுகின்றது. ஆகவே அப்பொழுது எல்லாம் முடிவு பெற்று விடுகின்றது, எல்லாமே முடிவு பெற்று உறுதியான நிலைக்குள் சென்று விடுகின்றது. பாதுகாப்பு கிடைக்குமென்று விசுவாசிக்கின்றீர்களா; அப்படியானால் அடையாளத்தை போட்டுக்கொள்ளுங்கள் ! பாருங்கள்? அதற்காக விசுவாசியுங்கள்... இதற்காகத் தான் அதை நீ விசுவாசிக்க விரும்புகிறாய். பாருங்கள் உங்களுக்கு உங்கள் சொந்த பாதுகாப்பு அவசியமாயிருக்கிறது. அப்படியானால் உங்கள் பாதுகாப்பிற்காக விசுவாசித்து உங்கள் முழு குடும்பத்திற்கும் அந்த அடையாளத்தை எடுத்து இடுங்கள். பாருங்கள்? "அதை நான் எப்படி செய்ய முடியும்?'' என்று நீங்கள் கேட்கலாம். அதை உரிமை கோருங்கள்! அது உங்கள் மீது கிரியை செய்த தானால், அப்பொழுது நீங்களும் அந்த வார்த்தையும் ஒன்றாகி விடுகின்றீர்கள். ஆமென், ஆமென், அது உங்கள் இருவருக்காகவும் கிரியை செய்கின்றது. நீங்களும் வார்த்தையும் ஒன்றாயிருக்கிறீர்கள். அப்பொழுது அதை உங்கள் பிள்ளைகளின் மீது வையுங்கள். ராகாப் செய்தது போல உங்களுக்கு அருமையானவர்கள் மேலும் அதை வையுங்கள். அவள் அந்த அடையாளத்தை தன் தகப்பனின் மீது வைத்தாள்; அதைத் தன் தாயின் மீதும் வைத்தாள்; அதைத் தன்னுடைய சகோதரரின் மீதும் தன்னுடைய சகோதரிகளின் மீதும் வைத்து அவர்கள் எல்லாரையும் அதற்குள்ளாகக் கொண்டு வந்தாள். அதை நீங்கள் பூசிக் கொள்ளுங்கள். "கர்த்தாவே என் மகன் பின்னால் நான் செல்கின்றேன். நான் என் மகளின் பின்பாகச் செல்கின்றேன். நான் அவளை உரிமை கோருகிறேன்; சாத்தானே, நீ அவளை விட்டுவிடு. நான் அவள் பின்னால் வருகிறேன். நான் என்னுடைய அடையாளத்தை வைக்கின்றேன்” என்று கூறுங்கள். அந்த பரிசுத்த ஆவி.... "ஓ, எனக்குள்ளாக வாசம் செய்யும் பரிசுத்த ஆவியே, அங்கே என் மகளை பிடியும். உம்முடைய அபிஷேகத்தை என்மீது கொண்டவனாக நான் இப்பொழுது அவளிடம் செல்கின்றேன். அவர் அதை கண்டிப்பாகச் செய்வார். ஆமென்.'' எகிப்திலும் அவர்கள் அதையே செய்தனர். அதைத் தான் எரிகோவிலும் அவர்கள் செய்தனர் (யோசுவா 6:22) வேறொரு வசனத்தை நீங்கள் படிக்க விரும்புகிறீர்களா? அப்போஸ்தலர் 16:31 பவுல் நூற்றுக்கதிபதியிடம் கூறினான். "விசுவாசி; நான் இந்த மணி நேரத்தின் செய்தியாளன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.'' அது சரியா? உங்கள் வீட்டாருக்காக நீங்கள் விசுவாசியுங்கள்! அவர்கள் எல்லாரையும் அடையாளத்தின் கீழாக கொண்டு வாருங்கள் ! அடையாளத்தை உங்கள் வீட்டிற்கு நீங்கள் வைத்த பிறகு நீங்கள் செய்ய வேண்டியது என்ன? வீட்டிலுள்ள எல்லா குப்பைகளையும் வெளியே வீசுங்கள்! எல்லா குட்டைப் பாவாடைகளையும், குட்டைக் கால் சட்டைகளையும், சீட்டு விளையாடுதல், சிகரெட்டுகளையும், தொலைக் காட்சி பெட்டிகள் (TV) மற்றும் எதுவாயிருந்தாலும் அவைகளை வீட்டிலிருந்து காலால் உதைத்து வெளியே தள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் அடையாளத்தை பூசப் போகின்றீர்கள், அதற்காக அப்படியே ஒன்றும் செய்யாமல் இருந்து விடாதீர்கள். ஆம், ஐயா. அவை எல்லாவற்றையும் வெளியே எடுத்துப் போடுங்கள்! எல்லா விதமான நடனங்கள் மற்றும் பார்ட்டிகளையும், ராக் அண்ட் ரோல் இசைகளையும், கீழ்த்தரமான செய்தித்தாள்களையும் மற்றும் உலகப் பிரகாரமான எல்லா காரியங்களையும் வாசலை விட்டு காலால் உதைத்துத் தள்ளுங்கள்! “இந்த இடத்தை நாங்கள் சுத்தமாக்குகிறோம்” என்று கூறுங்கள். ஆம். பொருள்களை வைக்கும் அடுக்கு பலகை, நிலையடுக்கை (Cupboard) சுத்தமாக்குங்கள்; வீட்டை சுத்தமாக்குங்கள். ஓ, நமக்கு ஒரு அருமையான பழமை நாகரீக பாணியிலான வீடு தூய்மையாக்குதலை கொண்டிருக்கிறோம். அதை சுத்தப்படுத்துங்கள். அதை பரிசுத்தப்படுத்துங்கள். இரத்தம் அங்கே பூசப்படுவதாக. அப்பொழுது அடையாளம் உள்ளே வரும். நீங்கள் உங்களுடையது எல்லாவற்றையும் சுத்தப்படுத்தி முடித்த பிறகு அந்த அடையாளத்தை எடுத்து ஜெபத்திலே சமர்ப்பியுங்கள், நம்பிக்கையோடே அதைச் செய்யுங்கள். உலகத்தின் காரியங்களிலிருந்து நீங்கள் வெளியே வந்து விட்டீர்கள். எல்லா அவிசுவாசத்தையும் எடுத்து வெளியே போட்டு விட்டீர்கள். 'மக்கள் என்ன சொன்னாலும் அதைக்குறித்து எனக்கு அக்கறையில்லை. வார்த்தை அதைக் கூறி அதை வாக்குத்தத்தம் செய்திருக்குமானால் நான் அதையே விசுவாசிக்கிறேன். வார்த்தை அதைக் கூறியிருக்குமானால் அவ்வளவுதான். எல்லாம் முற்றுப் பெற்று விட்டது. யார் என்ன கூறினாலும் அதைக் குறித்து எனக்கு அக்கறையில்லை பாருங்கள் அவையெல்லாவற்றையும் நீங்கள் செய்து முடித்த பிறகு, நீங்கள் இரத்தத்தை பூசியுள்ளீர்கள், ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் விசுவாசிக்கிறீர்கள், அப்பொழுது முழு நிச்சயத்துடனேயிருந்து உங்கள் அடையாளத்தை ஜெபத்திலே கொண்டு செல்லுங்கள். ஆயத்தமாகுங்கள் ! அடையாளத்தைப் போடுங்கள் ! அதை விசுவாசியுங்கள்! சுத்தமாக்குங்கள்! உங்கள் பிள்ளைகள், உங்கள் குடும்பம், உங்களுக்கு அருமையானவர்கள் அடையாளம் உங்களுக்குள்ளாக இருப்பதைக் காணும்படிக்குச் செய்யுங்கள். அது சரி. அது பயனை உண்டாக்கும். ஆம் ஐயா. ஆகவே அந்த அடையாளத்தை மனதிற்கொண்டு, விசுவாசத் துடனே அதை மிகவுமாக நேசத்துடன் அது நிச்சயமாக நிறைவேறும் என்று நீங்கள் அறியும் வரையிலும் ஜெபத்தோடே சமர்ப்பியுங்கள். அவ்வளவுதான். அது நிச்சயமாக உதவப்போகின்றது என்று விசுவாசித்துக் கொண்டே அதை நம்பிக்கையுடனே பூசிக் கொள்ளுங்கள். அந்த பிள்ளையுடனே நீங்கள் பேசுகையில், உங்கள் கணவருடன் பேசுகையில், உங்கள் மனைவியுடன் பேசுகையில், உங்களுக்கு அருமையானவர்களிடம் பேசுகையில், அது நிச்சயமாக உதவி செய்யப் போகின்றது என்று விசுவாசித்து அங்கே நின்று, "கர்த்தாவே, நான் அவர்களை உரிமை கோரி விட்டேன்; அவர்கள் என்னுடையவர்கள். கர்த்தாவே, அவர்களை நான் உமக்காக எடுக்கின்றேன்" என்று கூறுங்கள். அந்த அடையாளத்தை இடுங்கள், அவர்கள் நேராக அதற்குள்ளாக வரத்தக்கதாக உங்களைச் சுற்றிலும் அந்த சூழ்நிலையை உண்டாக்குங்கள். பாருங்கள்? ஓ , நீங்கள் அந்த அடையாளத்தைக் கொண்டிருப்பீர்களானால், உங்களைச் சுற்றிலும் வல்லமை என்னும் ஆவியை உருவாக்கி, நீங்கள் நடந்து செல்கையில் நீங்கள் ஒரு கிறிஸ்தவன் என்று மக்கள் அறிந்து கொள்ளும் படிக்குச் செய்யும். நீங்கள் அவர்களிடம் ஏதோ ஒன்றை பேச வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள். நீங்கள் என்ன கூறுகின்றீர்களோ அதை, உங்கள் வார்த்தையை அவர்கள் விசுவாசிப்பார்கள், அதை அப்படியே பற்றிக் கொள்வார்கள். பாருங்கள்? அது தான் காரியம். அந்த அடையாளத்தை இடுங்கள்; பிறகு அதனுடனே நடவுங்கள். உங்கள் வீட்டாரை உரிமை கோருங்கள்? இப்பொழுதே அதை நீங்கள் செய்யவேண்டும். இது சாயங்கால நேரமாகும். இப்பொழுது, நீண்ட காலமாக கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்; இப்பொழுது இது சாயங்கால நேரமாகும். அடையாளத்தைப் போட்டுக் கொள்கின்ற நேரம் இதுவேயாகும். வருகின்ற நாட்களில் ஒன்றில் கோபாக்கினை நிச்சயமாகத் தாக்கும்; அப்பொழுது மிகவும் காலதாமதமாகி விட்டிருக்கும். பாருங்கள். பாருங்கள்? நம்பிக்கையுடனே அந்த அடையாளத்தைப் போட்டுக் கொள்ளுங்கள். அடையாளத்தை போட்டுக் கொள்ளுங்கள், பிறகு, ஜீவிக்கின்ற கிரியைகளுக்காக, ஜீவிக்கின்ற அடையாளங்களுக்காக, ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்யுங்கள: வியாதியஸ்தரை ககப்படுத்துகின்ற, மரித்தோரை உயிரோடெழுப்புகின்ற, காரியங்களை முன்னுரைக்கின்ற, அந்நிய பாஷையில் பேசுகின்ற, ஒவ்வொரு முறையும் பரிபூரணமாக பாஷையை வியாக்கியானப் படுத்துகின்ற, இன்னின்ன காரியங்கள் நடைபெறும் என்று கூறி தீர்க்கதரிசனம் உரைக்கின்ற, மேலே வானத்திலும் பூமியிலும் அடையாளங்களை காண்பித்து, அற்புதங்களையும் அடையாளங்களையும் நடப்பிக்கின்ற அந்த அடையாளங்கள். ஆமென். என்ன சம்பவிக்கும் என்று வேதாகமம் கூறியிருக்கின்றவைகளை உரைத்தல்.... ஜீவிக்கின்ற தேவனுக்கு ஊழியம் செய்யுங்கள் ! அடையாளத்தை பூசிக் கொள்ளுங்கள் ! எனவே சாயங்கால நேர நிழல்கள் தோன்றுகின்றன, தேவ கோபாக்கினை தேவனற்ற நாடுகள் மேலும், அவபக்தியுள்ள அவிசுவாசிகளின் மேலும், எதுவுமே பெற்றுக் கொள்ளாமல் போதனைச் செய்பவர்கள் மேலும், இந்த காரியங்கள் மேலும் பரத்திலிருந்து ஊற்றப்பட ஆயத்தமாயுள்ளது. இப்பொழுது நாம் நிழல்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், தேவ கோபாக்கினை தாக்குவதற்கு ஆயத்தமாயுள்ளது, தேவன் ஒரு அடையாளத்தை உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கின்றார். பரிசுத்த ஆவியாகிய அவருடைய அடையாளத்தை நீங்கள் பெற்றுக் கொண்டீர்களா என்று அவர் காண்கின்றார். அந்த ஒரே வழியை, அந்த ஒரே அடையாளத்தை கண்டால் மாத்திரமே தேவன் கடந்துச் செல்வார், ஏனெனில் அது ஒரு விசுவாசிக்குள்ளாக திரும்ப வந்துள்ள மாறாத தத்ரூபமான இயேசு கிறிஸ்துவின் அதே ஜீவனாகும். மிருகத்தின் ஜீவன் அவ்விதமாக திரும்ப வர முடியாது. ஆகவே இரத்தம் கதவுகளிலும் நிலைக்கால்களின் மேலும் தெளிக்கப்பட வேண்டிய அவசியம் உண்டாயிருந்தது. அதனால் அந்த வீட்டைக்கடந்து சென்ற ஒவ்வொரு வரும், பொது மக்கள் யாவரும், அந்த வீட்டண்டை வந்த ஒவ்வொருவரும், அந்த வீட்டின் வாசலில் இரத்தமாகிய ஒரு அடையாளம் பூசப்பட்டுள்ளதென்றும், ஒரு ஜீவன் அந்த வாசலண்டை மரித்ததென்றும் அறிந்து கொண்டனர். ஆமென். ஏனென்றால் அது ஒரு மானிட மனிதனின் மீது வரக்கூடாமலிருந்தது, ஏனென்றால் ஒரு மிருகத்திற்கு ஆத்துமா கிடையாது. தான் நிர்வாணமாக இருக்கிறோம் என்பது ஒரு மிருகத்திற்குத் தெரியாது, பாவம் என்பது என்ன என்று அதனால் உணர்ந்து கொள்ள முடியாது. அதற்கு ஒன்றுமே தெரியாது. ஆகவே அது ஜீவியம் செய்கின்ற ஒரு மிருகம் மாத்திரமே, ஜீவிக்கின்ற ஒரு ஆத்துமா அல்ல. ஆகவே ஒரு மிருக ஜீவனின் மீது திரும்ப வர முடியாது, ஏனெனில் அந்த மிருகத்தின் ஜீவனில் ஆத்துமா கிடையாது. ஆகவே இந்த மகிமையான இடத்தில், இந்த உடன்படிக்கையின் கீழ் இரத்தத்திற்கும் ஜீவனுக்கும் இடையே ஒரு வித்தியாசம் இருக்கின்றது. இன்றைக்கு ஒரு விசுவாசிக்கான அடையாளம் பரிசுத்த ஆவியே, இரத்தம் அல்ல, ஒரு இரசாயனம் அல்ல; ஆனால் அது தேவனுடைய பரிசுத்த ஆவி ஆகும். இன்றைக்கு சபை வைத்துக்கொண்டிருக்க வேண்டுமென்று தேவன் விரும்புகின்ற அடையாளம் அது வேயாகும். அந்த அடையாளத்தை தேவன் கண்டிப்பாக பார்க்க வேண்டும். அதை நம் ஒவ்வொருவருக்குள்ளும் அவர் காண வேண்டும். ஆகவே, உங்கள் ஆட்டுக்குட்டி மரித்த தென்றும், அந்த அடையாளத்தை நீங்கள் உங்கள் மேல் பெற்றுக் கொண்டீர்கள் என்றும், அவருடைய சொந்த ஜீவன் உங்களுக்குள்ளாக இருக்கிற தென்றதாக உறுதியான ஒரு அடையாளம் பரிசுத்த ஆவியாகும். பாருங்கள்? அதை பாவனை விசுவாசம் செய்வது என்பது கிடையாது. அதை பெற்றுக்கொண்டிருப்பது போல நடிப்பது என்பது முடியவே முடியாது. அதை போலியாக நடித்துக் காட்டுவதென்பதும் கிடையாது. அது அங்கே இருக்கின்றது. அது உங்களுக்கு தெரியும். அது உங்களுக்குத் தெரியும்; உலகத்திற்கும் அது தெரியும். அந்த அடையாளம் அங்கே இருக்கின்றது. தேவைப்பட்ட அந்த கிரயம் செலுத்தப்பட்டாயிற்று என்றும், செலுத்தப்பட்ட அந்த கிரயம் இயேசு கிறிஸ்துவினுடைய ஜீவன் என்றும் அவர் தம்முடைய ஜீவனை அளித்தார் என்றும், அவருடைய ஆவிதான் உங்கள் மீது வந்துள்ள மற்றும் நீங்கள் பெற்றிருக்கின்ற அடையாளம்தான் என்கின்ற அடையாளம் அதுவாகும். அப்பொழுது அந்த அடையாளத்தை நீங்கள் பகலும் இரவும் சுமந்து செல்வீர்கள், ஞாயிற்றுக் கிழமை மாத்திரம் கொண்டிருப்பது என்பதல்ல. அதை எல்லா நேரத்திலும் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் அந்த அடையாளத்தைக் கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது, உங்களுக்கு நித்திய ஜீவன் வேண்டுமென்றால், அதற்கான கிரயம் செலுத்தப்பட்டாயிற்று என்பதைக் காண்பிக்கும் ஒரு அடையாளத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள். அது இரத்தமல்ல, ஆனால் அது இரத்தத்தினுடைய அடையாளமாகும். அது அவருடைய ஜீவனேயாகும். ஆமென். தேவனுடைய வார்த்தை முழுவதற்கும், தேவனுடைய முழு வார்த்தைக்கும், முழுவதுமாக கீழ்ப்படிதலே அந்த அடையாளத்தை நீங்கள் பெறுவதற்கு தகுதியுள்ளவராக்கும். நீங்கள் தேவனுடைய வார்த்தை முழுவதற்கும் முழுவதுமாக நீங்கள் கீழ்ப்படிந்து, அதற்கு முழுவதுமாக அற்பணித்து சரணடையும் போது அந்த அடையாளத்திற்கு நீங்கள் உரிமையாளி ஆகின்றீர்கள். ஆம் ஐயா, கீழ்ப்படிதல், என்னை நோக்கி கர்த்தாவே, கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அல்ல, ஆனால் என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே' ஆகவே நாம் ஜெபிக்கையில் ஜெபத்தோடே அடையாளத்தையும் கூட சமர்ப்பிக்கத் தக்கதாக அடையாளத்தை நாம் கொண்டிருக்க வேண்டும். நினைவில் கொள்ளுங்கள், இரத்தம் சொட்டுகின்ற வார்த்தையினுடைய தண்ணீரினால் உங்கள் வஸ்திரங்கள் தோய்க்கப்பட்டிருக்கின்றது. அந்த வார்த்தை இரத்தமானது. அந்த வார்த்தை உங்களுக்காக இரத்தம் சிந்தினது, அந்த இரத்தம் சொட்டுகின்ற வார்த்தையினாலே நீங்கள் கழுவப்பட்டிருக்கிறீர்கள். வார்த்தை இரத்தம் சொட்டிக்கொண்டிருக்கின்றது, தேவனுடைய ஜீவன் அந்த வார்த்தையில் இருக்கின்றது, அந்த வார்த்தை உங்களுக்காக இரத்தம் சிந்தினது, ஏனென்றால் அசுத்தத்திலிருந்து நீ வார்த்தையின் தண்ணீர் முழுக்கினால் சுத்திகரிக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்படுவாயாக (எபே 5:26) அது உங்கள் மனதையும் இருதயத்தையும் தேவன் பேரிலேயும் அவருடைய வார்த்தையின் பேரிலேயும் தரித்திருக்கும் படியாகச் செய்யும். இன்றிரவு அந்த இரத்தம் எளிய விசுவாசத்தினாலே பூசப்படுகின்றது, ஒரு இயற்கைக்கு மேம்பட்ட காரியத்தைக் கொண்டு மாத்திரமே அல்ல. அது சரியாக இப்பொழுது உங்கள் எல்லாரைச் சுற்றிலும், எல்லா இடத்திலும் அது இருக்கின்றது. ஒரு குழந்தை செய்வது போல நீங்களும் உங்கள் கையை மாத்திரம் நீட்டி அதை (இரத்தத்தை ) அப்படியே எடுங்கள், அந்த இரத்தத்தை போட்டுக் கொள்ளுங்கள். அந்த ஈசோப்பு ஒரு விசுவாசிக்கு சாதாரணமான எளிய, குழந்தை போன்ற விசுவாசம் ஆகும். உங்களால் பெற்றுக் கொள்ளவே முடியாது என்ற ஒரு காரியமாக அது இல்லவே இல்லை. அதைப் பெற்றுக் கொள்ள மிகவும் பிரயாசப்படவோ, உங்கள் கையை வெகு தூரம் நீட்டவோ தேவையேயில்லை. அந்த நாட்டிலே வளருகின்ற இந்த ஈசோப்பு, சுவர்களிலுள்ள ஓட்டைகளிலும் வளருகின்றது : அந்த ஈசோப்பு தண்டு வைரக்கல் வடிவைப் போன்ற சிறு இலைகளைக் கொண்டதாக இருக்கும். இங்கே நம் நாட்டிலே ஒரு புல்லை அல்லது நாணற்புல்லை எங்கு வேண்டு மானாலும் கண்டெடுத்து பிடுங்குவது போல அந்த ஈசோப்பை எல்லா இடத்திலும் நீங்கள் பார்கலாம், அதை எங்கு வேண்டுமானாலும் கண்டு பிடுங்கிக்கொள்ளலாம். அதைப் பிடுங்கி இரத்தத்தில் தோய்த்து வாசலின் நிலைக்காலின் மேல் வையுங்கள். அதே விதமாகத் தான் விசுவாசமும் எடுத்து இட்டுக்கொள்ளப்பட வேண்டும். கூறப்போனால் எந்த விதமான ஐயமின்றி விசுவாசத்தை எடுங்கள், இருதயத்தின் வாசலில் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை விசுவாசத்தினாலே பூசுங்கள். இக்காரியம் ஒரு வித்தியாசத்தை காண்பிக்க, அது எகிப்தை விட்டு வெளியே செல்பவர்களுக்கும் மற்றும் எகிப்திலே இருந்து எகிப்தோடே கூடவே அழிந்து போகப் போகிறவர்களுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை காட்டவே. அது வித்தியாசத்தை உண்டாக்கினது. அவிசுவாசிகளிட மிருந்து விசுவாசிகளை பிரிக்க அன்றிரவு அக்காரியம் தான் அவருக்குத் தேவைப்பட்டது. தொழுது கொண்ட விசுவாசி தன்னுடைய பலியோடே அடையாளம் கண்டு கொள்ளப்பட்டான். அவன் அந்த இரத்தத்தை பூச வேண்டியிருந்தது. ஒரு ஆட்டுக் குட்டியை எடுத்து அதைக் கொன்று இரத்தத்தை எடுத்து எங்கோ வைத்துக் கொள்வது, அல்லது அதை ஒரு தாம்பளத்தில் வைத்து அக்கம் பக்கத்தினருக்கு கொண்டு செல்வது அல்ல. அவன் அந்த இரத்தத்தை எடுத்து பூசவேண்டியவனாக இருந்தான். அந்த விதமாகத்தான் இன்றிரவும் கூட. நாம் வந்து தேவன் செய்கின்ற எல்லா காரியங்களும் நலமானது என்று ஆமோதித்து உகந்த கருத்துக்களைக் கூறலாம், ஆனால் தேவனுக்கு தேவைப்படுவது அதுவல்ல. அதை நீங்கள் முழு கவனத்தையும் ஈடுபடுத்தி ஏற்று பயன்படுத்த வேண்டும். அதை நீங்கள் இடும் வரைக்கும் எந்த வித உபயோக முமில்லை. இரத்தம் பூசப்பட வேண்டும். அவ்விதம் செய்கையில் நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறீர்கள். தொழுது கொள்ளுகிறவன் தன்னுடைய கையை ஆட்டுக்குட்டியின் மேல் வைத்து அதைக் கொன்று அந்த பலியோடே தன்னை அடையாளப் படுத்திக் கொள்கிறான். அதே காரியத்தைத்தான் இன்றிரவும் நாம் செய்கிறோம், அது என்னவென்றால் நம்முடைய பலியின் மேல் நம்முடைய கரத்தை வைத்து அவரோடே நம்மை ஒருங்கிணைத்து அடையாளப்படுத்திக் கொள்கிறோம். அவர்தான் அந்த வார்த்தையாக இருக்கிறார். இன்றைக்கு நாம் கொண்டிருப்பதைப் போல அன்று அவர்கள் சுவிசேஷத்தைக் கொண்டிருக்கவில்லை; அது அவர்களுக்கு ஒரு முறையைக் கொண்டு போதிக்கப்பட்டு சடங்குகளினூடாக அது கை கொள்ளப்பட்டது, ஏனென்றால் அப்பொழுது பரிசுத்த ஆவி அருளப்படவில்லை. ஆனால் இன்றைக்கோ நாம் ஒரு திண்மையான நிச்சயத்தைக் கொண்டிருக்கிறோம். நாம் ஒரு முறையையோ அல்லது இரசாயனங்களை மாத்திரமோ கொண்டிருக்கவில்லை; இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை எடுத்து ஒவ்வொரு இருதயத்திலும் இட உங்களால் முடியாது. தேவன் பரிசுத்த ஆவியை திரும்ப அனுப்பியுள்ளார்; அது தான் ஒரு மானிடனின் மேல், மானிடனின் இருதயத்திற்குள் இருக்கின்ற அந்த அடையாளமாகும். நீங்கள் தேவனுடைய திட்டத்தை ஏற்றுக் கொண்டீர்கள் என்றும், யேகோவாவிற்கு தேவைப்படும் காரியங்களை நிறை வேற்றி விட்டீர்கள் என்பதற்கு அது தான் அடையாளமாகும்,அந்த தேவைகளை கல்வாரியில் உங்களுக்காக அவர் பூர்த்தி செய்து விட்டார், அந்த தேவைகளை உங்கள் முழங்கால்களின் மூலமாக நீங்கள் பூர்த்தி செய்து விட்டீர்கள். கிறிஸ்துவின் மேல் இருந்த அந்த ஆவி உங்களுக்குள்ளே இருக்கின்றது என்பதைக் குறிக்கின்ற அந்த அடையாளத்தை தேவன் உங்களுக்கு அளித்திருக்கின்றார், அது உங்களுக்கு ஒரு உத்திரவாதத்தை அளிக்கின்றது, அவருடை ஜீவன், மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதல் அதன் பிறகு விசுவாசிக்கின்ற சபையில் இப்பொழுது என்றென்றுமாக இருக்கின்றார் என்பதின் அடையாளமாகவும் அது இருக்கின்றது. ஆமென். அது ஒரு உறுதியான அடையாளமாகும், அடையாளச் சின்னமாகும். ஆகவே நீங்கள் நினைவில் கொள்ளுங்கள், அது அன்பினாலே தான் வரும், ஏனெனில் அவர் அன்பாக இருக்கின்றார். அன்பு! அன்பு!! செலுத்துங்கள், அவரை நேசியுங்கள் ! அவர் உங்களுக்கு செய்துள்ளதை சற்றுப் பாருங்கள். அது அன்பினாலே தான் ஆகும் ; அன்பு கீழ்ப்படிதலைக் கொண்டு வருகின்றது; அன்பு காதல் நயவுரையைக் (Courtship) கொண்டுவருகின்றது. அன்பு கல்யாணத்தைக் கொண்டு வருகின்றது; அதை நோக்கித்தான் நாம் சென்று கொண்டிருக்கிறோம்: ஆட்டுக் குட்டியானவரின் கல்யாண விருந்தை நோக்கி. நேசிக்கின்றார் என்று கூறும் என் இரட்சகருடைய சத்தத்தை என்னாலும் கேட்க முடிகின்றது. மிகவும் இனிமையான ஒன்று உங்களுக்குள்ளாக வருவதை, உங்கள் இருதயத்தில் வருவதை சற்று உணருங்கள்; அது தான் பரிசுத்த ஆவியாகும். உமது அன்பின் அடையாளமாகிய பரிசுத்த ஆவியை எனக்குத் தாரும், அது என்னை இனிமையாகவும், மிருதுவாகவும் வாழும் படிக்குச் செய்யும். கிறிஸ்துவுக்குள்ளாக இருந்த அந்த ஜீவியத்தை நான் வாழும்படிக்குச் செய்யும், அதனாலே என் இருதயம் மற்றவர்களுக்காக கொழுந்து விட்டு எரிய ஏதுவாக இருக்கும், என்னால் முடியும் வரை எவரெவரை இழுக்க முடியுமோ அவர்களெல்லாரையும் உள்ளே இழுக்கும் வரைக்கும் பகலும் இரவும் ஓயாமல் நான் உழைக்க ஏதுவாக இருக்கும்.